அண்மைக்கலமாக தீவிரவாதிகளின் அக்கிரமம் தலைதூக்கியுள்ளது.இந்திய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதில் பாகிஸ்தானில் இருந்து வந்து அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கொண்டும்,அவர்களை பயமுறுத்தியும் சதித்திட்டம் தீட்டிவரும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆதரவுடன்தான் இந்த தாக்குதல்களை நடத்திவருவதாக இந்தியாகுற்றமசாட்டி இருந்தது.இதனையடுத்து இருநாடுகளுக்கு இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாமல் போனது.
இந்நிலையில் தனக்கு வந்தால்தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும் என்பது போல தற்போது வினைவிதைத்த பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் நாட்டிலுள்ள மாகாணத்தில் கட்ட என்ற பகுதியில் டேனிஸ்கடா என்ற தனியார் பள்ளிக்கூடம் இயங்கிவருகிறது.அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தினர்.
அதில் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக்வும் செய்திகள் தெரிவிக்கின்றன.