Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் உள்நாட்டு விமான சேவை: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (18:27 IST)
முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த மார்ச் 24ஆம் தேதி முதலே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் சிக்கிய பலர் தங்களுடைய சொந்த ஊருக்கும், சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்தவுடன் விரைவில் உள்நாட்டு விமான சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக விமான நிலையங்களுக்கான ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் விமான பயணிகள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளையும் விமான நிலையங்களுக்கான ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதன்படி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் தங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சக பயணிகளிடம் இருந்து 4மீ இடைவெளியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்றும், விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வெகுவிரைவில் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments