Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் வேட்பாளராக மடாதிபதி போட்டி.. சனாதன தர்மத்தை சொல்லி ஓட்டு கேட்பு..!

Advertiesment
காங்கிரஸ் வேட்பாளராக மடாதிபதி போட்டி.. சனாதன தர்மத்தை சொல்லி ஓட்டு கேட்பு..!
, வியாழன், 9 நவம்பர் 2023 (17:03 IST)
தமிழ்நாட்டில் சனாதனத்தை எதிர்க்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் மடாதிபதியை வேட்பாளர் ஆக்கி உள்ள நிலையில் அவர் சனாதன தர்மத்தை பொதுமக்களிடம் கூறி வாக்கு கேட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் தூதே தாரி கோயில் மடாதிபதி ராம் சுந்தர் தாஸ் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜ்பூர் தெற்கு தொகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் பிரிஜ் மோகன் அகர்வால் என்பவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ராம் சுந்தர தாஸ் என்ற மடாதிபதியை களம் இறக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராம் சுந்தர் தாஸ் சனாதன தர்மம், இந்துத்துவா ஆகியவற்றை தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவர்களுக்கு மதியம் முட்டை பிரியாணி: அரசின் அதிரடி முடிவு..!