ரஜினி அதிமுகவில் இணணந்தால் தலைமை பொறுப்பு கிடையாது: செல்லூர் ராஜூ

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (15:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதி என்றாலும் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும், அதிமுகவின் தலைமை பொறுப்பு அவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினி அதிமுகவில் இணைந்தால் அவருக்கு தலைமை பொறுப்பு கிடையாது என்றும், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
 
மேலும் ரஜினி உள்பட யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராக இணைந்துதான் படிப்படியாக முன்னேற முடியும் என்றும் கட்சியில் சேர்ந்தவுடனே தலைமை பொறுப்பு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
 
ஆனால் தற்போது அதிமுக, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதிமுகவினர் என்ன முடிவு எடுத்தாலும் அது அமித்ஷா எடுத்த முடிவாகவே கருதப்படும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments