Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் முன்னாள் எம்பி கட்சியில் இருந்து விலகல்.. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரா?

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (12:50 IST)
தெலுங்கானா மாநில பாஜகவின் முன்னாள் எம்பி விவேகானந்த்  என்பவர் பாஜகவில் இருந்து விலகுவதாக    தெலுங்கானா மாநில பாஜக கட்சியின் தலைவர் கிசான் ரெட்டி அவர்களுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப்பியுள்ளார்.

பாஜகவின் தெலுங்கானா மாநில பிரமுகரும், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான விவேகானந்த்  பாஜகவில் இருந்த திடீரென விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் பாஜகவில் இருந்து விலகிய விவேகானந்த்  விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றால் விவேகானந்த்  முதல்வர் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது.

அவர் காங்கிரசில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கானா அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments