Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமாந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியமைக்கிறது

சீமாந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியமைக்கிறது
, சனி, 17 மே 2014 (17:52 IST)
சீமாந்திராவில் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. ஆந்திரபிரதேசத்தை சீமாந்திரா மற்றும் தெலுங்கானா என, இரு மாநிலங்களாக பிரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இந்நிலையில், சீமாந்திரா பகுதியிலுள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 104 தொகுதிகளிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில், பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
ஆந்திராவில் இதுவரை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், சீமாந்திராவில் ஒரு சட்டசபை தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியால் தொடங்கப்பட்ட  ஜெய் சமக்கியேந்திரா கட்சியும் ஒரு தொகுதில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்க்கது. 
 
குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கடசி தலைவர் சந்திரபாபு நாயுடு 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டபை தொகுதியில் பேட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். 
 
சீமாந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அந்தக் கூட்டணி சீமாந்திராவில் முதன்முறையாக அரசு அமைக்க உள்ளது. சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil