தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட பெண் ஆட்சியர் ஆம்ராபலி கதா என்பவருக்கு இளைஞர்கள் சிலை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட பெண் ஆட்சியர் ஆம்ராபலி கதா(35) இளைய தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமானவர். இளைஞர்களை உற்சாகப்படுத்த அவர் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.
இந்நிலையில் வாரங்கல் நகரின் காசியாபாத் பகுதியில் இளைஞர்கள் சிலர் அவருக்கு சிலை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிப்படுவது வழக்கம். ஆனால் இந்த இளைஞர்கள் பார்வதி கையில் விநாயகர் இருப்பது போல ஆம்ராபலி கதா கையில் விநாயகர் இருப்பது போல சிலை அமைத்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆட்சியர் அந்த இளைஞர்களை அழைத்து கண்டித்துள்ளார். பின் அந்த இளைஞர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிலையின் முகத்தில் கறுப்பு மையை பூசினர்.