டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 6 பேர் பலியா?
டெல்லியில் மார்ச் 13 முதல் 15 வரை மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அஞ்சப்படுகிறது.
இந்த மாநாடு இந்தோனேசியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மத போதகர்களால் நடத்தப்பட்டது என்றும் இந்த மாநாடு காவல் துறையினரின் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டதாகவும் அதில் 16 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாகவும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆறு பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளதாக தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மத வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் தங்களை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கின்றதா? என்பது குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனே பொதுமக்களும் தகவல் கூறலாம் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்த மத கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது