Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செகந்திராபாத்தில் போராட்டம் - போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:52 IST)
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 

 
மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.
 
இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். செகந்திராபாத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments