Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ – ஓப்பனாக ஒத்துக் கொண்ட பாஜக எம்.பி!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (09:00 IST)
தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்.பி தனக்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதை வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது.

ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி எம்.பியான சோயம் பாபு ராவ் என்பவர் தனது தொகுதி மக்களிடையே பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அதில் அவர் “எனக்கு இந்த தொகுதியில் வீடு இல்லை. அதனால் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டேன். எனது மகனின் திருமணத்தை கூட தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்துதான் நடத்தினேன். வேறு எந்த தலைவர்களும் என்னை போல இதை தைரியமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்” என பேசியுள்ளார்.
தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிதியை சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்திய சோயம் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments