கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:34 IST)
கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!
தெலுங்கானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த சிறுமியை வயல்வெளியில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவியை ஊருக்குள் விட அந்த கிராமத்தினர் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அந்த மாணவிக்கு தனியாக வயல்வெளியில் ஒரு தற்காலிக குடிசை போட்டு அதில் தங்க வைத்தனர் 
 
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிறுமியை ஊருக்குள் விட மறுத்த கிராமத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கொரோனா என்பது எதிர்பாராமல் ஏற்படும் தொற்று என்றும் அதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்களிடம் சுகாதார அதிகாரி அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments