Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டம்.. குடைச்சல் இல்லை.. ரயில் டிக்கெட் வாங்க டோக்கன் சிஸ்டம்! – தெலுங்கானாவில் அறிமுகம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (13:30 IST)
தெலுங்கானாவில் ரயில் டிக்கெட் பெற வரிசையில் நிற்பதை தவிர்க்க டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா குறைந்துள்ள நிலையில் ரயிலில் மக்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. அதேசமயம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் அனைத்திற்கும் மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நிற்பதும் தொடர்கிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் கூட்டம், குழப்பங்களை தவிர்க்க பயோமெட்ரிக் டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் டோக்கன் இயந்திரத்தை தெலங்கானாவிலுள்ள செகுந்துராபாத் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பயணிகளின் பயோமெட்ரிக் தகவல்களான அவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை போன்றவற்றையும் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்குகிறது.

இதன்மூலம் மக்கள் கூட்ட நெரிசலில் நெருக்கியடித்து டிக்கெட் பெறும் பிரச்சினை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இது வெற்றியடையும் பட்சத்தில் பல ரயில்நிலையங்களிலும் இது விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments