Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா எம்,எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து; மத்திய அரசு அதிரடி

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:21 IST)
ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்றிருக்கும் தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


 

 
தெலங்கானா வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷ் 2010ஆம் ஆண்டு டி.ஆர்.எஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆதிநிவாஸ் ரமேஷ் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆதிநிவாஸ், ஜெர்மன் குடியுரிமை பெற்றிருக்கும் ரமேஷ் போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என தெரிவித்து இருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த ஆந்திரா உயர்நீதிமன்றம் ரமேஷ் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. ஆனால் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கினார். இந்த தடைக்கு எதிராக ஆதிநிவாஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவரது இந்திய குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் தகவல் கேட்டது நீதிமன்றம். ஜெர்மன் குடியுரிமை பெற்ற ரமேஷ் போலி ஆவணங்கள் மூலமே இந்திய குடியுரிமை பெற்றிருக்கிறார் என்று மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது.     
 
இதனால் அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments