தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; 100 கிமீ இலக்கை தாக்கும் சோதனை வெற்றி..!

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (08:40 IST)
தேஜஸ் போர் விமானம் மூலம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் சோதனை ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வரும் நிலையில், 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட தேஜஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.

இந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சோதனை செய்யப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததை பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளது.

இந்த போர் விமானங்கள் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி, துல்லியமாக தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ  எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments