தேஜஸ் போர் விமானம் மூலம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் சோதனை ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வரும் நிலையில், 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட தேஜஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சோதனை செய்யப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததை பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளது.
இந்த போர் விமானங்கள் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி, துல்லியமாக தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva