கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

Mahendran
புதன், 19 நவம்பர் 2025 (12:00 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரம், தைக்காடு பகுதியில் உள்ள கோயில் அருகே நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மோதலில், 19 வயதான ஆலன் என்ற இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
 
அருகிலுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 30 இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, சமாதானம் பேச சென்ற ஆலனை அவர்கள் தாக்கினர். அப்போது ஒருவன் மறைத்து வைத்திருந்த பக்கெட் கத்தியால் ஆலனின் மார்பில் குத்த,   மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆலன் ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பிறகு, அவரை திட்டமிட்டு குத்தி மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்று முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments