Publish Date: Thu, 23 Nov 2023 (14:09 IST)
Updated Date: Thu, 23 Nov 2023 (14:10 IST)
IRCTC இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணிகள் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
தினந்தோறும் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 11 மணிக்கும் ஏராளமான பயணிகள் IRCTC இணையதளத்திற்கு வருவது உண்டு. ஆனால்
இன்று காலை 10 மணிக்கும், 11 மணிக்கும் முன்பதிவு செய்ய வந்தவர்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனை அடுத்து பயணிகள் சிலர் நேரடியாக ரயில் நிலையம் சென்று முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து IRCTC விளக்கமளித்துள்ளது. IRCTC இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.