ஒடிசா மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்த ஆசிரியரை, இரண்டு மாணவிகள் அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழக மாணவிகளை அங்குள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த இரண்டு மாணவிகள் ஒன்று சேர்ந்து கம்பால் அவரை மண்டியிடச் செய்து அடித்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.