உத்தரபிரதேச மாநிலத்தில் 3ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் சரமாரியாக கன்னத்தில் அறையும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை ஒருவர் 3ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக கன்னத்தில் அறையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக அந்த ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வகுப்பில் மாணவன் வரைவதில் மூழ்கி இருந்ததால் ஆசிரியை அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மாணவனை கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். அன்று மாலை வீடு திரும்பிய மாணவன் சோகமாக இருந்ததால், அவனது பெற்றோர்கள் சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அவர்கள், பள்ளியில் ஆசிரியை குறைந்தது 40 முறை அறைந்திருப்பார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து மாணவனின் பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்துள்ளனர். பள்ளி முதல்வர் அந்த ஆசிரியையை பள்ளியை விட்டு நீக்கம் செய்வதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் ஆசிரியை மிது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.