இந்தியாவிலேயே கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக அமலாக்கத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் கள்ளநோட்டுப் புழக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 1,398 ஆக இருந்த கள்ள நோட்டு வழக்குகள் இந்த ஆண்டில் 254 ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் அதிகாரிகளால் கைப்பற்றப் பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 5.05 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 5 மடங்கு குறைவாகும்.
இந்தியாவிலேயே அதிகமாகக் கள்ளநோட்டு புழங்கும் மாநிலமாக உத்தரகாண்ட் உள்ளது. இந்தப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 31 வழக்குகளின் கீழ் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்படும் கள்ளநோட்டுகள் கருவூலங்களில் வைத்து அழிக்கப்படுகின்றன.