Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள்.. 4வது இடத்தில் தமிழக முதல்வர்.. முதல் 3 இடங்களில் யார் யார்?

Advertiesment
MK Stalin

Mahendran

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (14:09 IST)
இந்தியாவின் சிறந்த அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் நான்காவது இடத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா டுடே நாளிதழ் நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு எடுத்து இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதலமைச்சர் யார் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 
இதில் நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பாக செயல்படுவதாகவும் மூன்றாவது இடத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐந்தாவது இடத்தில் உள்ளார்

 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாகை மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்.! தமிழகம் இந்தியாவின் மாநிலம் தானா? என கேள்வி.!