Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நபிகள் குறித்து பேசிய பாஜக பிரபலம்! – தாலிபான் கண்டனம்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (11:31 IST)
இஸ்லாமிய இறை தூதரான நபிகள் குறித்து அவதூறாக பேசிய பாஜக பிரமுகருக்கு தாலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நுபுர் சர்மாவின் இந்த பேச்சை கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நுபுர் சர்மாவின் இந்த பேச்சுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தாலிபான் அமைப்பு “இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமியர்களின் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்க கூடாது” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments