Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தமத தலைவர் தலாய்லாமா லடாக் விசிட்: பெரும் வரவேற்பு

Advertiesment
Talai lama
, வெள்ளி, 15 ஜூலை 2022 (19:29 IST)
புத்த மத தலைவர் தலாய் லாமா 4 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது 
 
80 வயதான புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
 
ஆனால் தலாய்லாமா வருகைக்கு சீனா எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ கமாண்டர் அளவிலான உயர்மட்ட 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த பயணத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
இந்தியா சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்றும் ராணுவ பலத்தை பயன்படுத்துவது தேவை இல்லாதது என்றும் தலாய்லாமா கூறியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இன்ஜினியர்!