Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

Mahendran
வியாழன், 10 ஏப்ரல் 2025 (10:24 IST)
மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் டெல்லிக்கு வர இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள்  ராணாவை  அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் அழைத்து வருகின்றனர். இந்த விமானம் இன்று பிற்பகலில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், ராணாவை டெல்லியில் ஆஜர்படுத்த இருப்பதால், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் சில மணி நேரத்தில் ராணா டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments