Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து – டி ஆர் பாலு கருத்து !

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (14:45 IST)
விடுதலைப் புலிகளாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக திமுக எம்.பி. டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பைக் குறைத்தது. இது சம்மந்தமாக நேற்று மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுபற்றி பேசுகையில்’ கடந்த மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அமைப்பு தொடர்ந்து இந்திய எதிர்ப்பு தோரணையை பின்பற்றுகிறது. அந்த அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு ஆபத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அப்படிப்பார்க்கையில் சோனியா காந்தியும் ஒரு இந்திய பிரஜைதான். அவருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என பேசினார்.

புலிகள் ஆதரவு கட்சியான மதிமுக இந்த கூட்டணியில் இருக்கையில் திமுக இப்படி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலிகளுக்காக திமுகவை விட்டு வெளியேறிய வைகோ இப்போது திமுகவின் இந்த குற்றச்சாட்டுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments