Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல்!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (16:47 IST)
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தபோது 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் என்பதும், இந்த கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது.
 
இதனை அடுத்து ஸ்வப்னா தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்காக தேசிய பாதுகாப்பு முகமை தீவிர முயற்சியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஸ்வப்னா தமிழகத்திற்கு தப்பியதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா தேசிய புலனாய்வு ஆணையத்தின் அதிகாரிகளால் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். 
 
ஸ்வப்னாவுடன் சந்தீப் என்பவரும் அவருடைய நண்பரும் கைதுசெய்யப்பட்டதாகவும், மூவரும் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன்பின் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. 
 
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அனுமதி கோரிய நிலையில் 7 நாட்கள் காவலுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments