இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

Siva
புதன், 28 மே 2025 (17:21 IST)
பஞ்சாப் போலீசில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அமன்தீப் கௌர் என்பவரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏப்ரல்  மாதம் கைது செய்யப்பட்ட இவர் மீது தற்போது ஊழல் குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
படிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராமில் "Insta Queen" என அறியப்படுவார். புகைப்படங்கள், வீடியோக்களில் ரோலெக்ஸ் வாட்ச், ஆடம்பர கார்கள், புது செல்போன்கள், தங்க நகைகள் என மேம்பட்ட  கணக்கிலடங்காத செலவுகளை செய்துள்ளார்.
 
இவரது முடக்கப்பட்ட சொத்துகளின் விவரங்கள்:
 
விராட் கிரீன் நிலம்: ரூ.99 லட்சம்
 
ட்ரீம் சிட்டி நிலம்: ரூ.18.12 லட்சம்
 
மஹிந்திரா தார் கார்: ரூ.14 லட்சம்
 
ராயல் என்ஃபீல்டு புல்லட்: ரூ.1.7 லட்சம்
 
iPhone 13 Pro Max, SE, Vivo: ரூ.56,000
 
ரோலெக்ஸ் வாட்ச்: ரூ.1 லட்சம்
 
வங்கி இருப்பு: ரூ.1.01 லட்சம்
 
மொத்தம்: ரூ.1,35,39,588.53
 
அமன்தீப், NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் Anti-Narcotics Task Force பிரிவால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் தொடரும் நிலையில், மேலும் சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments