பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இறக்கும் முன்பு அவர் கடைசியாக வெளியிட்ட ட்விட்டர் செய்தி மனம் நெகிழ செய்வதாக இருக்கிறது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ஒன்றுபட்ட தேச கொள்கையில் மிகுந்த தீவிரமாக இருந்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் உரிமைக்காக அரும்பாடுபட்டார். அவரது இரங்கலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தன் ட்விட்டரில் செய்தி வெளியிட்ட சுஷ்மா ஸ்வராஜ் “நன்றி பிரதமர் அவர்களே! மிக மிக நன்றி.. இதை காணவே என் வாழ்நாள் முழுக்க காத்திருந்தேன்” என கூறியுள்ளார்.
காஷ்மீர் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட அதே நாளில் சுஷ்மா ஸ்வராஜின் உயிர் பிரிந்தது. ஒன்றுபட்ட தேசத்தை தனது இறுதி நாட்களில் பார்த்து விட்டு மன அமைதியுடன் சென்றிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது இந்த ட்வீட்டை பலர் ஷேர் செய்து தங்கள் இரங்கல்களையும், அவரது ஆசை நிறைவேறியது குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.