பாகிஸ்தானில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கு இந்திய தூதரகம் மறுத்துவிட்டதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.
இந்நிலையில் இந்த விஷயத்தில் சுஷ்மா தலையிட வேண்டும் என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் டுவீட் செய்திருந்தார்.
இந்த டுவீட்-ற்கு பதில் அளித்திருந்த இந்திய தூதரகம், இந்திய அரசு மறுக்கவில்லை. பாகிஸ்தான் அரசை சேர்ந்த ஆசிஷ் உங்களுக்கு பரிந்துரை கடிதம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் இந்தியா விசா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது சுஷ்மா சுவராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ஆசிஷ் பரிந்துரை கடிதம் வழங்கினால், உடனே இந்தியாவில் சிகிச்சை எடுக்க பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் விசா வழங்கும். சொந்த நாட்டு மக்களுக்கு விசா வழங்க ஆசிஷ் ஏன் தயங்குகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், ஆஷிஷ் அனுமதி வழங்காததால் பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சுஷ்மா கடுமையாக சாடியுள்ளார்.