நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். அவர் பேசியபோது,
நடப்பாண்டிற்குள் 17 ஆயிரம் பசுமை கழிப்பறைக்குள் அமைக்கப்படும். மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் மற்றும் ஆந்யோதையா எக்ஸ்பிரஸ் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும். சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 50 கிமீ வேகம் அதிகரிக்கப்படும். ரயில் நிலையங்களில் தேவையானவற்களுக்கு வெந்நீர் வழங்கப்படும். ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை ஆன்-லைனில் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். ரயில்களுக்கு தேவையான மின்சாரத்தை நேரடியாக கொள்முதல் செய்ய திட்டம் என்று பேசினார்.