ஒவ்வொரு வருடமும் 251 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வைர வியாபாரி

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (06:36 IST)
சூரத்தை சேர்ந்த வைரவியாபாரி ஒருவர் ஒவ்வொரு வருடமும் அப்பா இல்லாத 251 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டுக்கான 251 திருமணம் நேற்று சிறப்பாக நடந்தது

சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி மகேஷ் சவான். கோடீஸ்வரரான இவர் ஒவ்வொரு வருடமும் அப்பா இல்லாததால் திருமணம் செய்ய பொருளாதார வசதி இல்லாத இளம்பெண்களுக்கு தனது செலவில் மிகப்பெரிய அளவில் சிறப்பாக திருமணம் செய்து வைக்கின்றார். இந்த திருமணத்தில் உள்ள இளம்பெண்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் மதச்சடங்குகளின்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது. நேற்று ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் 5 முஸ்லிம் பெண்கள், ஒரு கிறிஸ்துவ பெண் மற்றும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஒரு  பெண் ஆகியோர்களும் அடங்குவர்.

மேலும் திருமண செலவு அனைத்தையும் ஏற்பதோடு, ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தனது செலவில் சீர்வரிசையாக சோபா, பெட், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றையும் தருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்