பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்து, அந்த நாட்டை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு உளவு வேலை பார்த்ததாக இஸ்லாமாபாத் சிறையில் அடைத்துள்ளது. அவரை அவரது தாயும், மனைவியும் கிறித்துமஸ் தினத்தன்று சிறையில் சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது அவர்களின் தாலி, வளையல்கள் மற்றும் பொட்டையும் சிறை நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை என கூறி கலைத்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆவேசமடைந்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை துயரகரமானது. இந்தியர்கள் அனைவரையும் இது காயப்படுத்தியுள்ளது. துரௌபதியை துகில் உரித்தவர்களுக்கு நேர்ந்ததைப் போல, குல்புஷனின் குடும்பத்தாரை அவமதித்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும்.
மேலும், பாகிஸ்தான் மீது இந்திய அரசு போர்தொடுக்க வேண்டும். இந்த போரில் பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. நாளை கட்சியின் நிலைப்பாடாகக் கூட இது மாறலாம் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.