சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டதா? என்ன நடந்தது?

Siva
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (13:49 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் சரத்பவாரின் மகளும் ஆன சுப்ரியா சுலே செல்போன் மற்றும் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
 
தனது போன் மற்றும் வாட்ஸ் அப் கணக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தனது வாட்ஸ் அப் கணக்கிற்கு யாரும் தகவல் அனுப்ப வேண்டாம் என்றும் நேற்று சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 
 
நேற்று காலை சுப்ரியா சுலே புனே நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது   மர்மமான எண்ணில் இருந்து அவரது வாட்ஸ் அப் கணக்கிற்கு ஒரு செய்தி வந்ததாகவும் அதற்கு பதில் அனுப்பிய நிலையில் திடீரென அவரது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
 
மேலும் ஹேக் செய்த நஒஅர் 400 டாலர் அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தனது வாட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்ததை அடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
 
அவரது புகாரியின் அடிப்படையில் சைபர் கிரைப் போலீசார் நடவடிக்கை எடுத்து அவரது வாட்ஸ் அப் கணக்கை மீட்டு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் புனே காவல்துறைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments