Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை!

பாஜக அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை!
, திங்கள், 25 நவம்பர் 2019 (08:25 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மகாராஷ்டிராவில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு ஆதரவு அளிப்பதின் அடிப்படையில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் அவர்களும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர் 
 
webdunia
பாஜகவின் இந்த அதிரடி சிவசேனா உள்பட மகாராஷ்டிராவின் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனை அடுத்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன
 
இந்த வழக்கை அவசர வழக்காக கடந்த சனிக்கிழமை அன்று விசாரணை செய்யப்பட்டு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், மெஜாரிட்டியை நிரூபிக்க அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க காலக்கெடு குறித்த உத்தரவு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் சரத்பவார் பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படும் நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண் நண்பரே வெளியிட்ட ஆபாச வீடியோ: பிரபல பாப பாடகி தற்கொலை?