மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (16:21 IST)
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
2024 நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில், மாலை 6 மணிக்கு மேல் 76 லட்சம் 'போலி வாக்குகள்' பதிவாகியதாக கூறி, மும்பையைச் சேர்ந்த சேதன் சந்திரகாந்த் அஹிரே என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை முதலில் தள்ளுபடி செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
 
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து மனுதாரர் தனது குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஒரு செய்தி அறிக்கை மற்றும் மூன்றாம் தரப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதில் மட்டுமே மனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேர்தலை ரத்து செய்வதற்கு போதுமான சட்டபூர்வ ஆதாரங்கள் அல்ல.
 
தேர்தல் தொடர்பான முறைகேடுகளை எதிர்த்து வழக்கு தொடுக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்யப்பட வேண்டும். சாதாரண ரிட் மனு மூலம் தேர்தலின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்க முடியாது’ என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments