சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளை எதிர்க்கட்சிகளின் மீது தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என 14 கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சிபிஐ அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஆளும் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் சிபிஐ அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்பட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனைத்து மனுகளையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சிபிஐ அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் தனிப்பட்ட முறையில் பிரச்சனை இருந்தால் அதற்காக தொடர்புடைய உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.