ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விகளை அடுக்கி அதிர்ச்சி அளித்தது.
கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் காளைகளை அனுமதிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா என்ற அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் கடந்த பொங்கலுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைப்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் இன்றி உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. விசாரணையில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு கேள்விகளை அடுக்கி வைத்து அதிர்ச்சி அளித்தது.
காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம்பெற்றுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது ஏன்? எந்த நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.