Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் மனு புரியவே இல்லை: 370 நீக்கத்திற்கு எதிராக மனு கொடுத்தவருக்கு நீதிபதி உத்தரவு

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:22 IST)
காஷ்மீரில் சமீபத்தில் 370 சட்டப் பிரிவை நீக்க முடிவு செய்த மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் என இரண்டு மாநிலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை படித்த உச்சநீதிமன்ற நீதிபதி காஷ்மீரில் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கும் விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும்? உங்கள் கோரிக்கை என்ன? என்று வழக்கு தொடர்ந்த எ.எல்.சர்மாவிடம் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார் 
 
மேலும் உங்கள் மனுவை அரை மணி நேரம் படித்து பார்த்தும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் மனுவில் ஏகப்பட்ட பிழைகள் உள்ளன. அந்த பிழைகளை சரி செய்துவிட்டு 370வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்ய கோரி மனுதாரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மேலும் காஷ்மீரில் பத்திரிகைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்க கோரி காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் காஷ்மீரில் எந்தவித பத்திரிகைகளும் முடக்கப்படவில்லை என்று பதிலளித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments