Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்ரான் கான்: "இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது"

இம்ரான் கான்:
, புதன், 14 ஆகஸ்ட் 2019 (17:12 IST)
இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆசாத் காஷ்மீர் சட்டமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும் மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

"ஆனால், அதற்கு இந்தியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்."

"நான் நரேந்திர மோதிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம்."

'ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் நாஜிக்களின் சித்தாந்தமும் ஒன்று'

மேலும் பேசிய அவர், "18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.

ஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.

ஹிட்லருக்கு இருந்த அகங்காரமும், நரேந்திர மோதியின் அகங்காரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்.

'அழிவு இந்தியாவுக்கே...'

இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, குடியரகூ அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்." என்று அவர் கூறினார்.

பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியிங்கள் என ஆர்எஸ்எஸ்- ன் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருக்கரதால நடக்கல... கருணாஸுக்குள் எவ்வளவு வில்லத்தனம்