கொரோனா பரவலின்போது பரோலில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் நோக்கத்தில் கைதிகள் பலர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஒழிந்து மீண்டும் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் பரோலில் சென்ற கைதிகள் அனைவரும் 15 நாட்களுக்குள் சரணடை வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி சிறைத்துறை சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பரோலில் விடுவிக்கப்பட்ட 3630 விசாரணை கைதிகளில் 3365 பேரும் 751 தண்டனை கைதிகளில் 680 பேரும் இன்னும் சரணடைவில்லை என டெல்லி சிறைத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது