Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல்: வரலாற்றில் முதல் முறையாக ஊடகத்தை சந்தித்த நீதிபதிகள்!

உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல்: வரலாற்றில் முதல் முறையாக ஊடகத்தை சந்தித்த நீதிபதிகள்!
, வெள்ளி, 12 ஜனவரி 2018 (13:08 IST)
இந்திய நீதிமன்ற வரலற்றில் இதுவரை நடந்திராத ஒரு சரித்திர சம்பவம் இன்று நடந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
 
நான்கு நீதிபதிகள் அமர்வில் இருந்த மூத்த வழக்கறிஞரும் நீதிபதிகள் தேர்வுமுறையான கொலீஜியம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவருமான செல்லமேஸ்வர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது எதுவும் சரியாக இல்லை. நீதிமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
இதனை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னர் முக்கியமான ஒரு விவகாரத்தில் நான்கு நீதிபதிகள் கையெழுத்து போட்டு கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு அளித்தோம். ஆனால் அந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிலவுகிறது.
 
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வேறு வழியில்லாமல் எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வேறு வழியில்லாமல் நாங்கள் ஊடகங்களை சந்தித்தோம் என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டப்பேரவையை அல்வா விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!