Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. பாஜக எம்பி வழக்கில் அதிரடி..!

Mahendran
திங்கள், 21 ஜூலை 2025 (12:56 IST)
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது கர்நாடக அரசு அவதூறு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது, இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2024 ஆம் ஆண்டு ருத்ரப்பா என்ற விவசாயி தனது நிலம் வக்ஃப் வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக தேஜஸ்வி சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த கூற்று தவறானது என்று கூறிகர்நாடக அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. போலி செய்திகளைப் பரப்பியதாக தேஜஸ்வி சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் உத்தரவிட்டது.
 
மேலும் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், உங்கள் சண்டைகளை வாக்காளர் மத்தியில் வைத்துக்கொள்ளுங்கள், நீதிமன்றம் அதற்கு இடமில்லை என்றும் கூறி, 25 லட்ச ரூபாய் அபராதத்துடன் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments