வக்பு திருத்த சட்ட வழக்கில் இருந்து விலகிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 6 மே 2025 (07:45 IST)
சமீபத்தில் மத்திய அரசு வக்பு திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, அதன் பின்னர் குடியரசுத் தலைவர் அனுமதி பெற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் மனுவை மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா வரும் 15ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்குள் இந்த பதில் மனுக்களை அனைத்தையும் படித்து இந்த வழக்கில் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்பதால், "இந்த வழக்கை நான் விசாரிப்பதை விட அடுத்த நீதிபதி விசாரிப்பது சரியாக இருக்கும்" என்று கூறி, சஞ்சய் கன்னா இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
மே 15ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் பி. ஆர். கவாய் தலைமையில் இந்த வழக்கு மே 15ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments