டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் ஊடக விவாதங்கள்தான் அதிக மாசை உருவாக்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காற்று மாசை தவிர்க்க அரசு பணியாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காற்று மாசு தொடர்பாக ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் பயிர்களை எரிப்பதால் மாசு ஏற்படுவதாக பேசுகிறார்கள். எந்த சூழலில் அவர்கள் பயிர்களை எரிக்கிறார்கள் என்று யாரும் ஆராய்வதில்லை. தொலைகாட்சி விவாதங்கள்தான் அதிக மாசை உருவாக்குகின்றன. என்ன நடக்கிறது என்ன பிரச்சினை என பேசுபவர்களுக்கே தெரியவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.