நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளதை அடுத்து ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வாங்கி கொடுப்போம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் வெற்றி பெற்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.