Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிட தடையா?

Mahendran
சனி, 27 ஏப்ரல் 2024 (12:32 IST)
நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வழியாக உள்ளது.
 
ஷிவ் கெரா என்ற எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால்அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில்  ஒரு தொகுதியில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர், அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.
 
மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments