பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – பாஜக மூத்த தலைவர் கருத்து !

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (14:58 IST)
இந்திய பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்று பாஜக முன்னணி தலைவர் சுப்ரமண்ய ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய ஸ்வாமி சர்ச்சையானக் கருத்துகளுக்குப் பெயர் போனவருமான சுப்ரமண்ய ஸ்வாமி மற்றக் கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் தன் கட்சித் தலைவர்களையும் தைரியமாக விமர்சிப்பவர். இந்நிலையில் நாட்டின் பொருளாதார மந்தம், வெங்காய விலை உயர்வு ஆகியவற்றைப் பற்றி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் ‘வெங்காய விலை உயர்வு நமது அரசின் தோல்விதான். மக்களின் கைகளில் பணம் இல்லை. பணம் இருந்தாலும் அதனை செலவு செய்யப் பயப்படுகிறார்கள். பொருளாதாரத்தின் நிலை குறித்து 7முறை பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் புரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்’ எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பாஜகவில் சலசலப்பை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments