Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது: பாஜகவை சந்தி சிரிக்க வைத்த சு.சுவாமி!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:50 IST)
பாஜக அரசில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதியமைச்சராக இருந்தது இல்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையை சரி செய்யும் நோக்கோடு பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்துள்ளது மத்திய அரசு. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
அந்த வகையில், வங்கிகள் இணைப்பு குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர் பேசியதாவது, பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இது எளிதான காரியம் அல்ல. 
ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோடாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். நாடு இப்போது இருக்கும் பொருளாதார நிலைமையில் இதை செய்திருக்கக் கூடாது. பொருளாதார மந்த நிலைக்கு பாதி காரணம் காங்கிரஸ் அரசுதான். 
 
நரேந்திர மோடி ஒரு வீரர். பல நல்ல செயல்களை செய்துள்ளார். பொருளாதாரத்தில் நல்ல கொள்கை இருக்க வேண்டும். பாஜக அரசில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதியமைச்சராக இருந்தது இல்லை. 
தேவையான திட்டங்களை கொண்டுவர வேண்டும். அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம். அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. தற்போதைய பொருளாதார தேக்க நிலையை நிர்மலா சீதாராமனால் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments