ராமர் ஆண்ட இந்தியாவில் விலை இவ்வளவு?? – ராமாயணத்தை சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:59 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் எதுவும் குறிப்பிடப்படாததை சுப்பிரமணிய சுவாமி ராமாயணத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி “ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று பூடகமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments