Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுப்ரமணியன் சுவாமியிடம் சிக்கிக் கொண்ட கார்த்தி சிதம்பரம்

சுப்ரமணியன் சுவாமியிடம் சிக்கிக் கொண்ட கார்த்தி சிதம்பரம்
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (16:50 IST)
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, அரசியல் தலைவர்களின் மீது ஊழல் வழக்கு தொடர்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.


 

ஜெயலலிதா, சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு கூட இவர் தொடர்ந்ததுதான். இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளர். அதில் “ நாளை நான் ஒரு அரசியல்வாதியின் ஊழல் பற்றி தெரிவிக்க இருக்கிறேன். அவரின் வழக்கு விசாரணைக்கு பின்னர் மற்றொருவரை கையில் எடுக்க உள்ளேன். ஒரே நேரத்தில் இது நடக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள அரசியல்வாதி யார்  என அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர்.அதேவேலை அரசியல் வட்டாரங்களில் பலருக்கு பீதியை கிளப்பியது.

இந்தநிலையில் சுப்ரமணிரன் சுவாமி குறிப்பிட்ட அந்த நபர் கார்த்திக் சிதம்பரம் என்பது தெரியவந்தது. இது குறித்து சுப்ரமணியன் சுவாமி  வெளியிட்டுள்ள பதிவு இதோ,

கார்த்தி சிதம்பரத்திற்கு வெளி நாடுகளில் பல வங்கி கணக்குகள் உள்ளன. இது தொடர்பான விபரங்களை வருமான வரித்துறையினரிடம் அவர் கொடுக்கவில்லை. ஆனாலும் வருமானவரி துறையினர் இது குறித்து எந்த நட்வடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ப.சிதம்பரத்தின் நட்புதான் காரணம்.
மேலும்  முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பயனடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு கர்நாடக சிறைதான் கதி; உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை: கர்நாடக புலனாய்வு துறை